‘நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி..’ வெளியானது வலிமை கிளிம்ப்ஸ் விடியோ

‘நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி..’ வெளியானது வலிமை கிளிம்ப்ஸ் விடியோ

‘நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி..’ வெளியானது வலிமை கிளிம்ப்ஸ் விடியோ
X

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி வெளியான நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் விஜயின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வலிமை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வலிமை படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்று உள்ள சில காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.


Tags:
Next Story
Share it