ரூபாய் நோட்டில் படம் மாற்றம்.. இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!
ரூபாய் நோட்டில் படம் மாற்றம்.. இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியான தகவலுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி - டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக மற்றவர்களின் படத்தை மாற்ற ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ரிசர்வ் வங்கியிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

