சென்னை மின்சார ரயில் சேவை குறித்து முக்கிய அறிவிப்பு..!
சென்னை மின்சார ரயில் சேவை குறித்து முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், இன்று (14ம் தேதி) முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டம் மின்சார ரயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கையை 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்நிலையில், இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; ‘மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என 323 ரயில் சேவை இயக்கப்படும்.
அதேபோல், ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் 98 மின்சார ரயில்கள் இயக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
