Theme Check

ரேஷன்கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வரும் 31ம் தேதிக்குள் இதை நீக்குங்க..!

ரேஷன்கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வரும் 31ம் தேதிக்குள் இதை நீக்குங்க..!

ரேஷன்கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வரும் 31ம் தேதிக்குள் இதை நீக்குங்க..!
X

ரேஷன் கார்டுகளில் உள்ள இறந்தவர்களின் பெயரை வருகிற 31-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் அதன் விவரங்களை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து இறந்த உறுப்பினர்களின் பெயரை நீக்கம் செய்வது குடும்ப தலைவரின் கடமை ஆகும்.

அவ்வாறு நீக்காமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். ஆகவே, இதுநாள் வரை நீக்கம் செய்யாமல் உள்ள இறந்த குடும்ப உறுப்பினர்களின் இறப்பு சான்றிதழை குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமர்ப்பித்து பதிவிலிருந்து வருகிற 31-ம் தேதிக்குள் நீக்கும்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெயரை நீக்கம் செய்ய desca.py.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it