Theme Check

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது..!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது..!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது..!
X

கடந்த சில தினங்களாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே 12-ம் வகுப்புக்கான உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாளை (16ம் தேதி) நடைபெறவுள்ள 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானது குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது.

திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுத தயார் படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story
Share it