Theme Check

11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
X

‘11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் ஜூலை 1-ம் தேதி முதல் தங்கள் பள்ளியின் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, பள்ளி மாணவர்கள் பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் ஜூன் 30-ம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும். மதிப்பெண் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது.

விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it