முக்கிய அறிவிப்பு - நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை..!!
முக்கிய அறிவிப்பு - நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை..!!

தமிழகத்தில் எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2022-2023-ம் ஆண்டுக்கு எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான டான்செட் தோ்வு மே 14-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்.பிளான் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தோ்வு மே 15-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுகளை எழுதுவதற்கான விண்ணப்பப் பதிவு அண்மையில் தொடங்கியது. டான்செட் தோ்வுக்கு மொத்தம் 36,710 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு மே 2 வெளியிடப்பட்டது. இதனை, அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

