Theme Check

முக்கிய செய்தி.. 21-ம் தேதி முதல் இவர்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் வினியோகம்..!

முக்கிய செய்தி.. 21-ம் தேதி முதல் இவர்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் வினியோகம்..!

முக்கிய செய்தி.. 21-ம் தேதி முதல் இவர்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் வினியோகம்..!
X

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படுகிறது என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 40 பணிமனை - பேருந்து நிலையங்களில் ஜூலை 31 வரை இலவச டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இலவச டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, போக்குவரத்து கழகத்தின் https://mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it