திருமணத்திற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..
சரியான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறீர்களா? அப்படியெனில், உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, கீழ்காணும் விஷயங்களை படித்து யோசித்து, உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்..

சரியான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறீர்களா? அப்படியெனில், உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, கீழ்காணும் விஷயங்களை படித்து யோசித்து, உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்..

எதற்காக திருமணம் செய்கிறோம்..
திருமண வாழ்க்கைக்குள் போகும் போது, இதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். நீங்கள் எதற்காக திருமணம் செய்கிறீர்கள்.. உங்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோரின் நெருக்கடிக்காகவா? அல்லது உண்மையாகவே தனது வாழ்க்கை மற்றொருவருடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவா? வயதான காலத்திலும் உங்கள் துணையோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கே திருமணம். எனவே உங்களின் உறவுக்கு மதிப்பளிக்கிறவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

திருமணம் என்பது விழா அல்ல வாழ்க்கை
திருமணம் என்பது உண்மையான பந்தத்திற்கான அஸ்திவாரம். எனவே அதை ஆடம்பரமாகவும், கவர்ச்சிகரமாகவும் மற்றவர்களுக்காக கொண்டாட யோசிப்பதை விட்டு விட்டு, தங்களுடைய மகிழ்ச்சியை மட்டுமே வைத்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள்.

வாழ்க்கை துணையை புரிந்து கொள்ளுதல்
திருமணத்திற்கு பிறகு நாட்கள் செல்ல செல்ல உங்கள் துணையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆகவே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வாய்ப்பளியுங்கள். புரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்குங்கள். இறுதிவரை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மகிழ்ச்சியாக குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்றால், புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

யதார்த்தமான எதிபார்ப்பு
திருமண பந்தத்தில் ஒன்று சேரும் தம்பதி.. நண்பர்களாக வாழ தொடங்கி விட்டால் சுலபமாக எந்த பிரச்சனையும் ஆட்கொள்ளாது. குறிப்பாக பணம் விஷயங்களில், ஆடம்பரமான பரிசுகளை தனது துணை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு.. அவரிடம் உள்ள உண்மையான அன்பை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். இருப்பினும் அவ்வபோது, தங்களால் முடிந்தவரை துணைக்கு பிடித்த சிறு சிறு பரிசுகளை வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தால், வாழ்க்கை துணைக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது..
Newstm.in
newstm.in

