இந்தியாவில் ரூ. 100-ஐ கடந்தது பெட்ரோல் விலை..!
இந்தியாவில் ரூ. 100-ஐ கடந்தது பெட்ரோல் விலை..!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் எரிவாயு விலை லிட்டருக்கு ரூ. 100-யை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது தான் இதற்கு காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 106.64-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து மத்தியபிரதேசத்தின் இந்தூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 103.78-ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே மாநிலத்தின் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 103.71-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூரில் ரூ. 101.88 ரூபாய்க்கும், மும்பையில் ரூ. 101.76 ரூபாய்க்கும் என நாட்டில் மொத்தம் 7 நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-யை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

