திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
X

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.

இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறையிலும் மின்துறையிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு 87 கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் 50 சதவீதம் வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பிறகு பல மடங்கு அதிகரித்தது. அதிமுக அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை” என்றார்.

இந்நிலையில் வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் திமுக மக்களை திசை திருப்புகிறது. கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர். மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:
Next Story
Share it