ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சியில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்..!!
ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சியில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்..!!

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
- ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சியில் பாஜக படுதோல்வி. வெற்றியை தன்வசமாக்கியது திமுக..ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய பாஜக சார்பில் போட்டியிட்ட அம்சவேணி 10 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
- சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி இதுவரை 50 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிமுக சுயேச்சைகள் தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
- நாகை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக 28 வார்டுகளில் வெற்றி பெற்றது. நாகை நகராட்சியில் அதிமுக 5, சயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
- திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி திமுக வசமானது.
- சென்னை மாநகராட்சியின் 99 வது வார்டில் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி 7,268 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உட்பட 13 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. ஆலந்துறை, தாளியூர், இடிகரை, ஒத்தக்கால் மண்டபம், பெரிய நெகமம், பேரூத் பேரூராட்சிகள் திமுக வசமாகின. பூலுவபட்டி, சமத்தூர், சர்க்கார்சாமகுளம், சிறுமுகை, தென்கரை, வேட்ப்பாடி பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது.எஸ்.பி. வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது.
- ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
- சலங்கபாளையம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 12 வார்டுகளிலும், அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர்கள் தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
- சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் சமீனா செல்வம் வெற்றி பெற்றார்.
- உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் அதிமுக டெபாசிட் இழந்தது.
- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அதிமுக தோல்வியடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி.
- சென்னை ராயபுரம் 60 வது வார்டில் திமுக-வை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து கட்சியும் டெபாசிட் இழப்பு.
- கோவை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கிருபாலினி உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
Next Story

