Theme Check

நடுரோட்டில் செம குத்தாட்டம்! கமலுக்காக களமிறங்கிய அக்‌ஷரா, சுஹாசினி!

நடுரோட்டில் செம குத்தாட்டம்! கமலுக்காக களமிறங்கிய அக்‌ஷரா, சுஹாசினி!

நடுரோட்டில் செம குத்தாட்டம்! கமலுக்காக களமிறங்கிய அக்‌ஷரா, சுஹாசினி!
X

இன்று மாலை 7 மணியுடன் அனல் பறக்கும் பிரச்சாரம் தமிழகத்திலும், புதுவையிலும் நிறைவடைகிறது. கோவை தெற்கு தொகுதி தான் தமிழக சட்டமன்ற தொகுதிகளிலேயே அதிகம் திரும்பி பார்க்க வைத்த தொகுதியாக பேசப்படுகிறது. தினம் தினம் வானதிக்கும், கமலுக்கும் வார்த்தைப் போர் தான்.

கமல், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால், கமல் குறித்து பாரதிராஜா இப்படி பேசினார். கமலுக்கு அரசியல் தெரியாது.. தெரியாது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவன்கிட்ட கவனமா இருங்க.. அவனுக்கு அரசியல் தெரியலைன்னா கூட கத்துக்கிட்டு வந்து ஜெயிச்சு நிப்பான்’ என்றார்.

அது முழுக்க முழுக்கவே நிஜமாகும் போல. ஒரு தேர்ந்த அரசியல் தலைவராக கமல் காட்சியளிக்கிறார். சாந்தமான முறையில் பிரச்சாரம், கண்ணியமாக எதிர்கட்சி வேட்பாளர்களையும் அரவணைத்து செல்வது என்று கோவை தெற்கு தொகுதியில் மாஸ் காட்டுகிறார். கோவைவாசியாகவே மாறிவிட்டார் கமல்.

இன்னொரு புறம், கோவையில் கடைகளை அடித்து உடைப்பது என்று பாஜகவினர் செய்த அட்டூழியங்கள் கமலுக்கு கூடுதல் ஆதரவைத் திரட்டி தருகிற வாய்ப்பு இருக்கிறது. இறுதி பிரச்சார நாளான இன்று கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மகள் அக்‌ஷரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கமலுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி மணிரத்னமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் அக்‌ஷராவும், சுஹாசினியும் கமலுக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒரு தெருவில் மேளத்தாளம் முழங்க அக்‌ஷ்ராவை குத்தாட்டம் போட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . கையில் கமலின் சின்னமான டார்ச்லைட் காண்பித்தவாறு சுஹாசினியும் அக்‌ஷராவுடன் சேர்ந்து நடனமாடினார்.

Tags:
Next Story
Share it