Theme Check

54 லட்சம், 100 செல்போன்கள்! அதிர்ச்சி கிளப்பிய ஐடெக் மோசடி!

ஐ.டி.துறையில் பலியானவர்களின் பெயரில் மோசடி... 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது!

54 லட்சம், 100 செல்போன்கள்! அதிர்ச்சி கிளப்பிய ஐடெக் மோசடி!
X

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் கிரெடிட் கார்டு மூலம் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று தலைமறைவான நபரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என தனியார் வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. 54 லட்சம், 100 செல்போன்கள்! அதிர்ச்சி கிளப்பிய ஐடெக் மோசடி!இதனையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், I.T துறையில் பணிபுரிந்து உயிரிழந்த நபர்கள் குறித்த செய்திகளை, நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் மூலம் சேகரித்தனர். அவர்களின் பெயரில் ஆவணங்களை உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்து 6 பேர் கொண்ட கும்பல், அவர்களின் பெயரில் கிரெடிட், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். 54 லட்சம், 100 செல்போன்கள்! அதிர்ச்சி கிளப்பிய ஐடெக் மோசடி!விசாரணையில், கிழக்கு கோதாவரி, நல்கொண்டா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உயிரிந்த ஐ.டி. ஊழியர்களின் விவரங்களை சேகரித்து, அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து, 53 லட்சத்து 93 ஆயிரத்து 43 ரூபாய், ஒரு கார், போலி அடையாள அட்டைகள், 100 செல்போன்கள், போலி அடையாள அட்டைகளை தயார் செய்வதற்காக பயன்படுத்தக் கூடிய இயந்திரங்களையும் போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it