Theme Check

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
X

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக, இன்று (டிச. 8) கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 10,11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it