Theme Check

லலிதா ஜூவல்லரியில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை!!

லலிதா ஜூவல்லரியில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை!!

லலிதா ஜூவல்லரியில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை!!
X

சென்னையின் தி.நகர் பகுதியில் உள்ள லலிதா ஜூவல்லரி ஷோரூமில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்குவதையொட்டி, வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதையடுத்து, சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து இன்றும் இரண்டாவது நாளாக பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார் கிடைத்ததை அடுத்து ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடை, தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகம்,உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மட்டுமில்லாமல்,மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல நடிகை டாப்ஸி, இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it