தமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை!
தமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழகத்தின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலம்மாள் கல்வி நிறுவன குழுமம் தமிழகத்தில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் வரையில் இந்தக் குழுமம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சொந்தமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை, மதுரை என இந்நிறுவன குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலம்மாள் கல்வி குழுமம், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை முகப்பேர், திருவள்ளூர் சூரப்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ், பொறியியல் கல்லூரி, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதே போல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் காலை 10 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர், நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
newstm.in
newstm.in

