Theme Check

நேற்றைவிட அதிகரிப்பு.. இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு !!

நேற்றைவிட அதிகரிப்பு.. இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு !!

நேற்றைவிட அதிகரிப்பு.. இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு !!
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய ஆண்டில் புதுவேகம் எடுக்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலை மாறி இப்போது ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு பாதிப்பு என்கிற நிலையில், கொரோனா பரவல் ‘ஜெட்’ வேகம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 1.9 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இன்று பாதிப்பு 27% என அது உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து, கொரோனா சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கை 11,17,531 என்று உயர்ந்துள்ளது.

corona

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84,825 பேர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,47,15,361 என்று உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதத்தை பொறுத்தவரை, அது 95.59% என்றுள்ளது. இதுவரை

தினசரி கொரோனா உறுதியாவோர் எண்ணிக்கை, 13.11% என்றாகியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை பொறுத்தவரை, இதுவரை மொத்தம் 5,488 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதாகவும், 2,162 பேருக்கு தொற்று குணமானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உதவும் பேராயுதமான தடுப்பூசி விநியோகமும் இந்தியாவில் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it