Theme Check

கொரோனா மருத்துவமனையில் அதிகரித்த உடலுறவு, போதை பயன்பாடு.. பிரிக்கப்படும் பெண் நோயாளிகள் !!

கொரோனா மருத்துவமனையில் அதிகரித்த உடலுறவு, போதை பயன்பாடு.. பிரிக்கப்படும் பெண் நோயாளிகள் !!

கொரோனா மருத்துவமனையில் அதிகரித்த உடலுறவு, போதை பயன்பாடு.. பிரிக்கப்படும் பெண் நோயாளிகள் !!
X

வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் பலரின் முதல் தேர்வாக தாய்லாந்து இருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மருத்துவமனையில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்காக்கிற்கு தெற்கே உள்ள சமுத் பிரகான் (Samut Prakan) மாகாணத்தில் அனைத்து வசதிகளுடன் கொரோனா சிகிச்சைக்கு ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த மருத்துவமனையில் பாலியல் சம்பவங்கள், சண்டைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு பற்றிய குற்றச்சாட்டுகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது ஆண்களை பெண்களிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

thailand hospitel

இந்த மருத்துவமனையில் சுமார் 1,000 நோயாளிகள் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பெண்கள், ஆண்கள் ஒரே மாதிரியாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் ஒன்றாக உடலுறவில் ஈடுபடுவது, சட்டவிரோத போதைப்பொருட்கள் செய்தல் மற்றும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்த புகார்கள் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கு விரைந்த அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். பின்னர் தற்போதைக்கு உடனடி நடவடிக்கையாக மருத்துவமனையின் ஒழுங்கை மீட்க, பாலினங்களை பிரித்து ஆண் மண்டலங்கள் மற்றும் பெண் மண்டலங்களை உருவாக்கி நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

thailand hospitel

குறிப்பாக முதல்கட்டமாக நோயாளிகளின் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனையின் பணியில் இருந்த அதிகாரிகளே புகார் அளித்தனர். விசாரணையின்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் குழுக்கள் கூடிவருவதாகக் காணப்பட்ட பகுதிகளைத் தேடினார்கள். ஆனால் சட்டவிரோத மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

thailand hospitel

அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நோயாளிகள் உடலுறவில் ஈடுபடாமல் இருக்கவும், மோதல், போதைப்பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it