அதிகரிக்கும் கொரோனா – மாஸ்க் அணிவது கட்டாயம்!!
அதிகரிக்கும் கொரோனா – மாஸ்க் அணிவது கட்டாயம்!!

கொரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநிலஅரசு அறிவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் முதல் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 26ஆம் தேதி தினசரி பாதிப்பு 500க்கும் அதிகமாக பதிவானது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிசையில் உள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது. மேலும் மாவட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதில், ரயில், பேருந்து, திரையரங்கு, ஆடிட்டோரியம், அலுவலகம், மருத்துவமனை, கல்லூரி மற்றும் பள்ளி உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in

