Theme Check

அதிகரிக்கும் மின்வெட்டு.. தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம் !!

அதிகரிக்கும் மின்வெட்டு.. தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம் !!

அதிகரிக்கும் மின்வெட்டு.. தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம் !!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திடீரென பல மாவட்டங்களில் மின்வெட்டு நிலவி வருகிறது. பகல், இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் மின்வெட்டு நிலவுவதால் தமிழகம் முழுவதும் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர், சித்தூர். தொழுதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மணிக்கு ஒருமுறை எவ்வித அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

power

இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், ஏற்கனவே புழுக்கம் ஒருபக்கம் இருக்கும் நிலையில் கொசுக்கடிக்கு மத்தியில் தூக்கம் இல்லாமல் தவிப்பதாகவும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் கடுமையாக அவதிப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் திட்டக்குடி அருகே மணிக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருவிளக்கு கம்பங்களிலும் தீப்பந்தங்களை கட்டிவைத்தனர்.

இரவில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டது. புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். பொதுத் தேர்வு நெருங்கி உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மின்சார அலுவலகத்திற்கு போன் செய்தால் சரியான பதில் கூறுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

power

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதற்கிடையில், தமிழ் நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it