Theme Check

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் நுழைந்து இந்தியா அபாரம் !!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் நுழைந்து இந்தியா அபாரம் !!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் நுழைந்து இந்தியா அபாரம் !!
X

19 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியர் ) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்குஇந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிந்து தற்போது நாக்அவுட் போட்டிகள் தொடங்கியுள்ளன. அந்தவகையில், நேற்றிரவு நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில் மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

v

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 26 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. யாஷ் தல் 20 ரன்னுடனும், கவுஷல் தாம்பே 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

வங்காளதேசம் சார்பில் ரிப்பன் மண்டல் 4 விக்கெட் வீழ்த்தினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்கப்போட்டிகளில் இருந்தே இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணியை கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக இந்திய அணி வரும் இரண்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை செமி பைனல் பிளே ஆஃப் இரண்டாது சுற்று போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

newstm.in

Next Story
Share it