பாகிஸ்தானுக்கு இந்தியா இலவச கொரோனா மருந்து! 4.5 கோடி பேருக்கு தர சம்மதம்!
பாகிஸ்தானுக்கு இந்தியா இலவச கொரோனா மருந்து! 4.5 கோடி பேருக்கு தர சம்மதம்!

உலகின் பல நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு தேவைகள் தவிர இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற அண்டை நாடுகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
நல்லெண்ண அடிப்படையில் சில நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து முதல் தொகுப்பு மருந்துகளை மார்ச் மாத மத்தியிலும், 2வது தொகுப்பு மருந்துகளை ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தான் நாடு பெற்று கொள்ளலாம் என இந்தியா அறிவித்துள்ளது.

அந்நாட்டின் 4.5 கோடி மக்களுக்கு தேவையான இலவச மருந்துகளை தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு சர்வதேச கூட்டணி திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடமிருந்து பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

