Theme Check

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் மோதும் India vs Pakistan.. தயாராகும் இந்திய மகளிர் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் மோதும் India vs Pakistan.. தயாராகும் இந்திய மகளிர் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் மோதும் India vs Pakistan.. தயாராகும் இந்திய மகளிர் அணி
X

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி அடுத்த வருடம் மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தின் டவுரங்காவில் தொடங்கும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நியூசிலாந்து , மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொண்டது என்பதும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது

ind woman

இந்திய அணிக்கு எப்போது போட்டி என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்றே, மார்ச் 6 ஆம் தேதி டவுரங்காவில் நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, மார்ச் 5 அன்று ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது .

எட்டு அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து மற்றும் இந்தியா ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தரவரிசையின் அடிப்படையில் இந்த தொடருக்கு தகுதி பெற்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்று நிறுத்தப்பட்டது. இதனால் தரவரிசையில் அடுத்தடுத்து இருக்கும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இந்த தொடருக்கு தகுதி பெற்றது.

ind woman

இந்த போட்டி லீக் முறையில் நடைபெறும், இதில் எட்டு அணிகளும் ஒரு முறை நேருக்கு நேர் மோதும், அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி மார்ச் 31ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it