Theme Check

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்பு.. வழக்கை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவு !

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்பு.. வழக்கை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவு !

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்பு.. வழக்கை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவு !
X

இந்திய தூதர் முகுல் ஆர்யா பாலஸ்தீனத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய தூதராக முகுல் ஆர்யா என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ரமல்லாவில் உள்ள பணியிடத்தில் இந்திய தூதர் முகுல் ஆர்யா உயிரிழந்ததாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

2008ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்ற முகுல் ஆர்யா, பாலஸ்தீன நாட்டுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தில் முகுல் ஆர்யா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்திய தூதரின் மறைவு இந்திய அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


இதனிடையே, முகுல் ஆர்யாவின் மறைவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதி முகுல் ஆர்யா காலமானது அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு திறமையான அதிகாரி. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் என தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரின் மரண வழக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன’ என்று பாலஸ்தீன நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it