Theme Check

"உலகத்திலேயே இந்திய நீதித்துறைதான் சிறந்தது" பிரதமர் மோடி புகழாரம் !

"உலகத்திலேயே இந்திய நீதித்துறைதான் சிறந்தது" பிரதமர் மோடி புகழாரம் !

உலகத்திலேயே இந்திய நீதித்துறைதான் சிறந்தது பிரதமர் மோடி புகழாரம் !
X

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இந்திய நீதித்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி புகழாராம் சூட்டியுள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் 60 -வது ஆண்டு விழாவை யொட்டி, சிறப்பு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தபால் தலையை வெளியிட்டு, பிரதமர் பேசுகையில், நீதிமன்றங்களின்மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையும் மக்கள் வைத்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்து, இதை நாம் பின்பற்றி வருகிறோம்.

சுதந்திர போராட்டத்திலும், இது தொடர்ந்து வருகிறது. நாட்டு மக்களின் உரிமைகளை, தனிநபர் சுதந்திரத்தை பாதுகாப்பதில், நீதித் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுகிறது,

உலகிலேயே, கொரோனா வைரஸ் காலத்தில் வீடியோ கான்பரன்ஸ்' முறையில், அதிக வழக்குகளை கையாண்ட பெருமை, இந்தி உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே கிடைத்தபெருமை.

தற்போது நீதிமன்றப் பணிகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. விரைவில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்படும் என்றார்.

விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி, எம்.ஆர். ஷா மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:
Next Story
Share it