அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு- எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !!
அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு- எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !!

மழை குறைந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வெப்பம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
அதோடுமட்டும் அல்லாமல், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தெற்கு ராஜஸ்தான், சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் கொங்கன் பகுதி ஆகிய பகுதிகளில் தற்போதே அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. மேலும், குஜராத்- ராஜஸ்தான் மற்றும் ஒடிசா வரை, வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. அப்பகுதிகளில் நாளை முதல் வெப்பத்தின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கும். ஆனால், இந்தாய்டு மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in

