காலணியில் இந்திய தேசியக்கொடி.. அமேசான் மீது வழக்குப்பதிவு..!
காலணியில் இந்திய தேசியக்கொடி.. அமேசான் மீது வழக்குப்பதிவு..!

பிரபல மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக்கொடி இடம் பெற்ற டி-ஷர்ட் மற்றும் காலணி போன்றவைகள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் அமேசான் நிறுவனத்தின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பலரும் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேசியக்கொடி சட்டத்தை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவிடுமாறு மத்தியபிரதேச அரசின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
Next Story

