இந்திய விமானங்கள் மே 15 வரை எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது.. ஆஸ்திரேலியா அறிவிப்பு !!
இந்திய விமானங்கள் மே 15 வரை எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது.. ஆஸ்திரேலியா அறிவிப்பு !!

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ஆம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் உச்சமாக ஏற்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியாவின் வடமாநிலங்களில் சுகாதார கட்டமைப்பு இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும் நாட்டில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இதனால் நாடு முழுவதும் அல்லாமல் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவுக்கு மருந்து, ஆக்சிஜன் அளித்து பல்வேறு நாடுகள் உதவிகரம் நீட்டி வருகிறது. அதேநேரத்தில் பரவி வரும் கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in

