Theme Check

உக்ரனில் இந்திய மாணவர் உயிரிழப்பு.. மருத்துவ மாணவர்களுக்கு உடல் தானம்..!

உக்ரனில் இந்திய மாணவர் உயிரிழப்பு.. மருத்துவ மாணவர்களுக்கு உடல் தானம்..!

உக்ரனில் இந்திய மாணவர் உயிரிழப்பு.. மருத்துவ மாணவர்களுக்கு உடல் தானம்..!
X

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியைச் சேர்ந்தவர் நவீன் (21). இவர், உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியபோது, மருத்துவ மாணவர் நவீன் உயிரிழந்தார்.
It was Naveen's concern for us that claimed his life': Friends remember  Indian student killed in Ukraine | Cities News,The Indian Express
மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாணவர் நவீனின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

அப்போது, இறுதிச் சடங்குகளுக்காக மகனின் உடலை மீட்டு தாயகம் கொண்டு வரக்கோரி மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவர் நவீனின் உடல் வரும் 21-ம் தேதி அதிகாலை கர்நாடக விமான நிலையத்திற்கு வந்து சேரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
Father of Naveen, who died in Ukraine, says his son could not get seat in  India due to reservation
இதுகுறித்து நவீனின் தந்தை சங்கரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய படையின் குண்டுவீச்சில் உயிரிழந்த எங்கள் மகன் நவீனின் உடல் வரும் 21-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும்.

அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும். நவீனின் உடலை மருத்துவம் படிக்கும் மாணவ - மாணவிகளுக்காக தேவநாகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானம் அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

Next Story
Share it