நாசாவின் அழைப்பை உதறித் தள்ளிய இந்திய மாணவன்! உலக நாடுகளை நெகிழ வைத்த காரணம்!!
கைநிறைய டாலர்களில் சம்பளம், சொகுசு வாழ்க்கை, நுனி நாக்கு ஆங்கிலம் என்று இன்றைய பெரும்பாலான இந்திய இளைஞர்களின் கனவு தேசமாக இருக்கிறது அமெரிக்கா. ஆனால், எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன் என்று வருகிற வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் 19 வயது மாணவனான கோபால்ஜி.

கைநிறைய டாலர்களில் சம்பளம், சொகுசு வாழ்க்கை, நுனி நாக்கு ஆங்கிலம் என்று இன்றைய பெரும்பாலான இந்திய இளைஞர்களின் கனவு தேசமாக இருக்கிறது அமெரிக்கா. ஆனால், எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன் என்று வருகிற வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் 19 வயது மாணவனான கோபால்ஜி.

பீகார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த கோபால்ஜி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அந்த பகுதியின் அரசு பள்ளியில் படித்த காலங்களிலேயே வாழை இலை கழிவுகளில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய கோபோனியம் அலாய் என புது புது முயற்சிகளில் ஈடுபட்டு தனது உழைப்பால் உருவாக்கி இருந்தார். தனது கண்டுபிடிப்புகளான வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமையையும் கோபால்ஜி பெற்றிருந்தார். தற்போது நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் உள்ளிட்ட சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தனது முயற்சி பற்றி அவரிடம் கூறிய போது, பிரதமர் மோடி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் கோபால்ஜியை அனுப்பி வைத்தார். அறிவியல் தொழில் நுட்பத் துறையினருக்கும் கோபால்ஜி தனது நான்கு புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

இதையடுத்து, கோபால்ஜிக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் துவங்கி, துபாய், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்லாம் கோபால்ஜிக்கு அழைப்புகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அழைப்பு விடுத்த அத்தனை நாடுகளையும் கண்டுக் கொள்ளாமல், 'இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தாக்கத்தில் தான் உழைக்க துவங்கினேன். அதனால் நான் இந்தியாவிலேயே இருக்க விரும்புகிறேன்’ என்று தனது குறிக்கோளில் உறுதியுடன் இருந்து வியக்க வைக்கிறார் இந்த மாணவர். கோபால்ஜியின் உறுதியைக் கண்டு நாடு முழுவதும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன!
newstm.in

