Theme Check

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்! தலை நிமிரும் கேரளா!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்! தலை நிமிரும் கேரளா!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்! தலை நிமிரும் கேரளா!
X

உலகம் முழுவது டிஜிட்டல் மயமாகி வருகிறது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி அலுவலக வேலை மட்டுமல்ல குண்டூசி முதல் காய்கறி வாங்குவது வரை அனைத்துமே டிஜிட்டல் மயம் தான். அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல், புத்தாக்க, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பல்கலைக்கழகமானது கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது.


அதன் திறப்பு விழாவில் கேரள மாநில ஆளுநா் ,முதல்வா் பினராயி விஜயன் ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டனா். இதில் உரையாற்றிய கேரள ஆளுநர் ‘புதிய தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.புதிய தொழில்நுட்பங்களைக் கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகவும், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, இணையவழிக் குற்றத் தடுப்பு தொழில்நுட்பங்களை இளைஞா்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

முதல்வா் பினராயி விஜயன் உரையில் ‘நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் இளைஞா்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும். தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளா்ந்து வரும் நிலையில் தொழில்நுட்பங்கள் அதிகப்படியான மக்களை சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பல்கலைக்கழகம் 10 ஏக்கா் பரப்பளவில் ஒரே நேரத்தில் 1,200 மாணவா்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி இவற்றில் சா்வதேச கல்வி தரத்தில் மற்ற நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பல்கலைக்கழகம் செயல்படும் எனத் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it