இந்தியா வரலாற்று சாதனை! இறுதிப்போட்டிக்கு தகுதி!!
இந்தியா வரலாற்று சாதனை! இறுதிப்போட்டிக்கு தகுதி!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் வென்று காட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வென்றிருந்தது. மற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று இந்த தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அங்கு நடந்த 2வது டெஸ்டில் 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

அகமதாபாத்தில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் வென்று காட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அசத்தியிருந்தனர்.
பவுலிங்கில் அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் விக்கெட் வேட்டை நிகழ்த்தியிருந்தனர். வேகப்பந்து வீச்சை விட சுழற்பந்துவீச்சு இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் எடுபட்டது. இங்கிலாந்து அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும் அந்த அணிக்கு பின்னடைவாக அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் மற்றும் அக்சர் என இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கும் கூடுதலாக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. வரும் ஜுன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறவுள்ளது.
newstm.in

