கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இந்தியாவின் சூப்பர் டூப்பர் ஜோடி!!
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இந்தியாவின் சூப்பர் டூப்பர் ஜோடி!!

காதலர்களாக இருந்து தம்பதியாக மாறிய ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி பெற்றோர்களாக மாற இருப்பதை அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 14ஆம் தேதி மும்பையில் எளிமையான முறையில் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் முன்னிலையில் ஆலியா- ரன்பீரின் திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு அவரது திரைப்பயணமும் தொடர்ந்தே வருகிறது.
இந்நிலையில் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் தங்களது குழந்தை விரைவில் வரப்போகிறது எனக் குறிப்பிட்டு, கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஆலியா பட் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.
அந்த படம்தான் தற்போது இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. ஆலியா-ரன்பீர் தம்பதிக்கு பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களது வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
ஆலியா, ரன்பீர் தம்பதி நடித்திருக்கும் பான் இந்தியா படமான பிரமாஸ்திரா வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
newstm.in

