Theme Check

கண்ணியக்குறைவு.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்..!

கண்ணியக்குறைவு.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்..!

கண்ணியக்குறைவு.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்..!
X

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்துக்கு உள்ளானது.

ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தகாத முறையில் கையாண்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தையை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்டது கண்ணியக்குறைவானது எனவும், நிலமையை மோசமாக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

Next Story
Share it