Theme Check

எல்லையில் ஊடுருவல்.. 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !!

எல்லையில் ஊடுருவல்.. 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !!

எல்லையில் ஊடுருவல்.. 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !!
X

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பயங்கரவாதிகள் உள்பட பலர் பதுங்கியுள்ள பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவந்திபோராவில் பாம்பூர் பகுதியில் க்ரூ என்ற இடத்தில் போலீசர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே உஷாரான பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது. இந்த என்கவுண்ட்டரில் மற்றொரு பயங்கரவாதியையும் படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

Indian-soldier army

அவர்கள் இருவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என தெரிவிக்கின்றனர். மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் நடப்பு ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பாஸ்டுனா பகுதியில் அமைந்த அரசு பள்ளி ஒன்றின் பணியாளரை கொலை செய்ததில் தொடர்புடையவன். க்ரூ பகுதியை சேர்ந்த முசைப் முஷ்டாக் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Indian-soldier army

இந்த நிலையில், காஷ்மீர் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it