Theme Check

ஐ.டி.யில் அசத்தல்.. இன்ஃபோசிஸ் நிறுவன லாபம் ரூ.5,686 கோடி !!

ஐ.டி.யில் அசத்தல்.. இன்ஃபோசிஸ் நிறுவன லாபம் ரூ.5,686 கோடி !!

ஐ.டி.யில் அசத்தல்.. இன்ஃபோசிஸ் நிறுவன லாபம் ரூ.5,686 கோடி !!
X

இந்தியாவில் மென்பொருள் சேவையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகத் இன்ஃபோசிஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.5,686 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதனை பங்குச் சந்தையிடம் பெங்களூரைச் சோ்ந்த அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.32,276 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.26,311 கோடியுடன் ஒப்பிடுகையில் 22.7 சதவீதம் அதிகமாகும்.

INFOSYS

மதிப்பீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ.5,076 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.5,686 கோடியானது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டைப் பொருத்தவரையில் நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி விகிதம் 13 முதல் 15 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 14.3 சதவீதம் அதிகரித்து ரூ.22,110 கோடியாகவும், வருவாய் 21 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,21,641 கோடியாகவும் இருந்தது. கடந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.165 வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

newstm.in


Next Story
Share it