Theme Check

உடல் முழுவதும் காயம்.. சிறுநீர் கழிக்க முடியவில்லை.. கோர்ட்டில் செவிலியர் சாட்சி..!

உடல் முழுவதும் காயம்.. சிறுநீர் கழிக்க முடியவில்லை.. கோர்ட்டில் செவிலியர் சாட்சி..!

உடல் முழுவதும் காயம்.. சிறுநீர் கழிக்க முடியவில்லை.. கோர்ட்டில் செவிலியர் சாட்சி..!
X

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது காவல் நிலையத்தில் உயிரிழந்தனர்.

காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலி அருணாச்சல பெருமாள் சாட்சியம் அளித்தார். அப்போது அவர், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜை அழைத்து வந்தபோது, அவரது உடல் முழுவதும் காயம் இருந்ததாகவும், சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர் பை பொருத்தியதாகவும் செவிலி சாட்சியம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it