இன்ஸ்டா காதல் திருமணம் செய்த சிறுமி சித்ரவதை.. கணவன், மாமியார், அண்ணிக்கு வலை !!
இன்ஸ்டா காதல் திருமணம் செய்த சிறுமி சித்ரவதை.. கணவன், மாமியார், அண்ணிக்கு வலை !!

சென்னை வியாசர்பாடி முல்லை நகர் இந்திரா நகர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு அணமையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சிறிது காலத்திலேயே சிறுமி, அவரது கணவன் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுவதாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக உள்ள காருண்யாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுபற்றி அவர் குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தைகள் நல குழுவினர், அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரிந்தது. குடும்ப பிரச்னை காரணமாக இவரது தந்தை தற்கொலை செய்துள்ளார்.

சிறுமி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு, கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் வியாசர்பாடி முல்லை நகரை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இன்ஸ்டாவை தொடர்ந்து செல்போன் எண்களை பறிமாறி நீண்டநேரம் பேசத்தொடங்கினர். அதன்பின்னர் ‘அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சுரேஷ் வீட்டார் கோவைக்கு நேரில் சென்று சிறுமியின் தாயிடம் பேசி, சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னை செங்குன்றம் அருகே பாடிநல்லூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு சுரேஷின் தங்கை மீனா, அவரது கணவர் தீபக் ஆகியோர் சிறுமிக்கும் சுரேசுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதன்பிறகு சுரேஷின் தாய் வளர்மதி சிறுமியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் சிறுமி தனது தாயாருக்கு போன் செய்து தகவலை கூறி உள்ளார். இதன்பிறகு சிறுமி, தனது தாயின் அறிவுறுத்தல்படி கோவைக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு சிறுமியின் ஊருக்கு சென்ற சுரேஷ், அவரது தாய் ஆகியோர் சிறுமியை சமாதானம் செய்து மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

எனினும் சிறிது நாட்களுக்கு பிறகுக மீண்டும் கணவனின் தாயார் சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அடித்து சித்ரவதை செய்தது தெரிந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகள், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை திருமணம் செய்து பாலியல் உறவுக்கு உட்படுத்திய சுரேஷ், தாய் வளர்மதி மற்றும் திருமணத்தை நடத்திவைத்த சுரேஷின் தங்கை மீனா, அவரது கணவர் தீபக் உள்ளிட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

