Theme Check

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. விமானப் பணிபெண் பாலியல் பலாத்காரம் !!

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. விமானப் பணிபெண் பாலியல் பலாத்காரம் !!

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. விமானப் பணிபெண் பாலியல் பலாத்காரம் !!
X

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூரை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், விமானப் பயிற்சிப் பணிபெண்ணாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அஜித் திவேதி என்ற பொறியியல் மாணவர் இன்ஸ்டாகிராமில் பழக்கமானார். ஒரே பகுதி என்பதால், முதலில் புகைப்படங்களையும் பிறகு போன் நம்பரையும் ஷேர் செய்துகொண்டனர்.

airplane

அதன்பின்னர் இருவரும் நேரில் சந்திக்க தொடங்கினர். அவ்வபோது வெளியே சந்தித்து வந்த நிலையில், தனது வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து விமானப் பணிப்பெண்ணை திவேதி அழைத்திருக்கிறார். அங்கு சென்ற அப்பெண்ணுக்கு திவேதி ஜுஸ் கொடுத்துள்ளார். அதனை குடித்த சில நிமிடங்களில் அப்பெண் மயங்கியவிழுந்துவிட்டார்

ஏற்கனவே திட்டமிட்டு அப்பெண்ணுக்கு ஜுஸில் மயக்கமருந்து கொடுத்தது அம்பலமானது. இதை எதிர்பார்த்த அந்த மாணவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். மயக்கம் தெளித்த அந்தப் பெண், நிலைமை புரிந்து அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்தச் சம்பவம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதம்.

airplane

பிறகு செல்போன் பதிவு செய்த வீடியோவை காட்டி மிரட்டியே, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த மாணவர். அவர் மறுத்தபோதெல்லாம் அவரை அடித்து துன்புறுத்தினாராம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அந்த விமானப் பணிப்பெண், போலீசில் புகார் செய்தார். போலீசார், இன்ஜினீயரிங் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it