Theme Check

இந்திய அணியால் நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. அர்ஜுனா ரணதுங்கா காட்டம் !!

இந்திய அணியால் நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. அர்ஜுனா ரணதுங்கா காட்டம் !!

இந்திய அணியால் நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. அர்ஜுனா ரணதுங்கா காட்டம் !!
X

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக அங்கேயே தங்கியுள்ளது.

இதனையடுத்து இம்மாதம் நடைபெறும் டி20, ஒருநாள் தொடருக்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் புதிய அணியை பிசிசிஐ அனுப்பியுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவ வீரர்கள் ஆவர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நம்மை அவமானப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள அவர், இது இரண்டாம் தர இந்திய அணி. இப்படிப்பட்ட இந்திய அணி இங்கு வந்திருப்பது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம். டெலிவிஷன் மார்க்கெட்டிங் தேவைகளுக்காக இப்படிப்பட்ட அணியுடன் ஆட ஒப்புக் கொண்டதற்காக நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே சாடுவேன். இப்படி இரண்டாம் தர அணியை அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என்று ரணதுங்கா காட்டமாகப் பேசியுள்ளார்.

சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டு பலவீனமான அணியை இங்கு அனுப்பியுள்ளனர், இதற்கு நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே நான் சாடுவேன் என்றார் அர்ஜுனா ரணதுங்கா சாடியுள்ளார்.

ஒன்று, இப்போது இருக்கும் இலங்கை அணிக்கு இந்த இந்திய அணிதான் சரியாக இருக்கும் என்ற வாதம் உண்மையென்றாலும், இந்த இலங்கை அணிஅந்த நாட்டின் பிரதான அணி, அது கால நேர சூழ்நிலைகளினால் பல்வேறு காரணங்களினால் இப்போது சரிவு நிலையில் உள்ளது என குறிப்பிட்டார்.

இந்திய அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். இது போக சில அதிரடி டி20 வீரர்கள் உள்ளனர், தேவ் தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், மணீஷ் பாண்டே, சூரியகுமார், பிரிதிவி ஷா ஆகியோரையெல்லாம் அவ்வளவு சுலபமாக இலங்கை எடைப்போட முடியாது என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it