Theme Check

அவமானப்படுத்திய கல்லூரி நிர்வாகம்.. தூக்கு மாட்டி மாணவி தற்கொலை....!

அவமானப்படுத்திய கல்லூரி நிர்வாகம்.. தூக்கு மாட்டி மாணவி தற்கொலை....!

அவமானப்படுத்திய கல்லூரி நிர்வாகம்.. தூக்கு மாட்டி மாணவி தற்கொலை....!
X

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி சித்ரா. இந்தத் தம்பதியின் 3-வது மகள் சுபாஷினி (19).

இவர், நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள ரூ.50 ஆயிரம் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன், பணம் கட்டாத மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்ததுடன், கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சுபாஷினி, இன்று காலை வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story
Share it