Theme Check

மின்னல் வேகத்தில் கழுத்தைத் தாக்கிய பவுன்சர்- மே.இ.தீவுகள் வீரருக்கு தீவிர சிகிச்சை.. வீடியோ !!

மின்னல் வேகத்தில் கழுத்தைத் தாக்கிய பவுன்சர்- மே.இ.தீவுகள் வீரருக்கு தீவிர சிகிச்சை.. வீடியோ !!

மின்னல் வேகத்தில் கழுத்தைத் தாக்கிய பவுன்சர்- மே.இ.தீவுகள் வீரருக்கு தீவிர சிகிச்சை.. வீடியோ !!
X

ஐபிஎல் போன்று பங்களாதேச நாட்டில், பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2022 இருவது ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் குல்னா டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் ஆடியபோது பேட்டிங் செய்யும் தருணத்தில் பவுன்சர் பந்து கழுத்தில் பலமாக தாக்கியது.

போட்டியின், ஏழாவது ஓவரில் பவுலர் ரெஜவுர் ரஹ்மான் ராஜா வீசினார். முதல் பந்து பயங்கரமாக எகிறியது, அதற்கு பிளெட்சர் ஒரு புல் ஷாட்டை முயற்சித்தார், ஆனால் அந்த பால் அவரது கழுத்தில் தாக்கியது. இதில் வலியால் துடித்த ஆண்ட்ரே பிளெட்சர், கீழே விழுந்தார். சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் அவரைச் சூழ்ந்து கவலையுடன் அவருக்கு உதவி புரிந்தனர். பின்னர் மருத்துவக்குழுவினர் மைதானத்துக்கு வந்து முதலுதவி அளித்து அவரை தூக்கிச்சென்றனர்.

flatcher பி

ளெட்சர் மைதானத்தில் கண்காணிப்பில் இருந்தபோது அவரது உடல்நிலை பரவாயில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய மருத்துவர் கூறினார். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் பின்னர்தெரிவித்தார். பிளெட்சர் நன்றாக இருக்கிறார். அவர் நனவுடன் தான் இருக்கிறார், உணர்வுப்பாதிப்பு எதுவும் இல்லை. எந்த பிரச்சனையும் உணரவில்லை என்றனர்.

flatcher

ஆனால் அவர் கழுத்தில் அடிபட்டதால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஸ்கேன் செய்ய மருத்துவர் பரிந்துரைத்தால் அது மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு அவர் பரவாயில்லை என்றார் பங்களாதேஷ் கிரிக்கெட் மருத்துவர்.

எனினும் ஆந்த்ரே பிளெட்சருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்பதால் அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா இறக்கப்பட்டுள்ளார்.


newstm.in


Tags:
Next Story
Share it