Theme Check

வ.உ.சி, வேலு நாச்சியார் உருவங்களுடன் அலங்கார ஊர்தி தயாரிக்கும் பணி தீவிரம்!!

வ.உ.சி, வேலு நாச்சியார் உருவங்களுடன் அலங்கார ஊர்தி தயாரிக்கும் பணி தீவிரம்!!

வ.உ.சி, வேலு நாச்சியார் உருவங்களுடன் அலங்கார ஊர்தி தயாரிக்கும் பணி தீவிரம்!!
X

தமிழ்நாட்டில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வேலு நாச்சியார், ..சி படங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி தயாராகிவருகிறது.

விடுதலை போரில் தமிழகம் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெற உள்ளன. ..சி, வேலுநாச்சியார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், காயிதே மில்லத், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெற உள்ளன.

மொத்தம் 4 ஊர்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன. ஒன்று மங்கல இசை ஊர்தி. எஞ்சிய மூன்று ஊர்திகள் "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளன.

tableux 1

இந்த அலங்கார ஊர்தியில் சுதேசி கப்பல், வேலூர் கோட்டை, வள்ளுவர் கோட்டத்தேர், காளையார் கோவில் உள்ளிட்ட மாதிரிகளும் இடம்பெற உள்ளன. இவற்றை வடிவமைக்கும் பணிகள் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது.

நிபுணத்துவம் வாய்ந்த சிற்பிகள் இவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இந்த பணிகள் முழுமையாக முழுமைபெறும். குடியரசு தின அணிவகுப்பிற்கு பின் கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு மக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்திகள் கொண்டு செல்லப்படுகிறது.

newstm.in

Next Story
Share it