பட்ஜெட் குறித்து நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!
பட்ஜெட் குறித்து நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த கால பட்ஜெட்டுகள் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல்முறையாக அப்போதைய நிதியமைச்சர் சண்முக செட்டியாரால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரைதான் வரலாற்றில் நீளமானது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.

1991ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிக்கையில் 18650 வார்த்தைகள் இருந்தன. இதுதான் அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட்.
1977ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் ஹுருபாய் முல்ஜுபாய் படேல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தன. அதுதான் மிக சிறிய பட்ஜெட்.

இந்தியாவில் அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். அவர் 10 பட்ஜெட் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். அடுத்தபடியாக ப.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா காலகட்டம் என்பதால் 2021ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் வடிவிலும் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
92 ஆண்டுகளாக பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு முதல் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது.
newstm.in

