கள்ளக்காதலுக்கு இடையூறு! மனைவியைக் கொன்று வீட்டிலேயே எரித்த கணவன்!! விருதுநகரில் பரபரப்பு!
கள்ளக்காதலுக்கு இடையூறு! மனைவியைக் கொன்று வீட்டிலேயே எரித்த கணவன்!! விருதுநகரில் பரபரப்பு!

விருதுநகர், குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவர் மனைவியை அடித்துக் கொன்று வீட்டில் வைத்து எரித்து, சாம்பலை கொண்டு சென்று அணையில் கரைத்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாகமுத்து என்பவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
இந்நிலையில் நாகமுத்துவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவி நிர்மலாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கணவருடன் சண்டை போட்டுள்ளார். இவருக்கும் இதுதொடர்பாக அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இதனால் கணவனை விட்டு பிரிந்து விருதுநகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகமுத்து மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்குள்ளும் சண்டை வந்தது. இப்போதும் நாகமுத்து பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது நிர்மலாவுக்கு தெரியவந்தது. அவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த நாகமுத்து கட்டையை எடுத்து நிர்மலாவை அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார். இதை அடுத்து மனைவி இறந்ததை யாருக்கும் சொல்லாத நாகமுத்து அருகிலிருந்த தகர கொட்டகையில் மனைவியின் சடலத்தை எரித்துள்ளார். பின்னர் சாம்பலை குல்லூர்சந்தை அணைத் தண்ணீரில் கரைத்துள்ளார்.

சகோதரியை காணவில்லை என்று நிர்மலாவின் அண்ணன் மூர்த்தி தேடி வந்த போது நாகமுத்து முறையாக பதில் சொல்லாததால் மூர்த்திக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரையடுத்து போலீசார் நாகமுத்துவை பிடித்து விசாரணை நடத்தியதில், கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியை அடித்துக் கொன்று எரித்து, சாம்பலை தண்ணீரில் கரைத்துவிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

