நாளை மறுநாள் வெளியிட தயாராக இருந்த படத்திற்கு இடைக்கால தடை!!

நாளை மறுநாள் வெளியிட தயாராக இருந்த படத்திற்கு இடைக்கால தடை!!

நாளை மறுநாள் வெளியிட தயாராக இருந்த படத்திற்கு இடைக்கால தடை!!
X

வரும் மார்ச்- 5ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த ‘நெஞ்சம் மறப்பத்தில்லை’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கஸான்ட்ரா, சுவேதா நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. தயாரிப்பாளர் தரப்பில் இருந்த பிரச்னை காரணமாக இத்தனை ஆண்டுகள் படம் வெளிவராமல் இருந்தது.அனைத்து பிரச்னைகளும் சுமூகமாக முடிக்கப்பட்டு வரும் மார்ச் 5-ம் தேதி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் திரைக்கு கொண்டுவரப்படும் என கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. படத்தை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக அந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்காக, ரேடியன்ஸ் மீடியா என்கிற நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.42 கோடி கடன் பெற்றுள்ளது.இதில் ரூ. 1.75 கோடி பணத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் வழங்கிவிட்டது. ஆனால் நிலுவை தொகை ரூ. 1.24 கோடியை செலுத்தாமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிடுவதாக கூறி ரேடியன்ஸ் மீடியா சார்பில், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

தங்கள் நிறுவனத்திற்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் செலுத்திவிட்டு, நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். முன்னதாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக்பீக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. தற்போது இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

Tags:
Next Story
Share it