Theme Check

பாகிஸ்தான் பிரதமர் செயலால் சர்வதேச அளவில் எழுந்த சர்ச்சையும் எதிர்ப்பும் !!

பாகிஸ்தான் பிரதமர் செயலால் சர்வதேச அளவில் எழுந்த சர்ச்சையும் எதிர்ப்பும் !!

பாகிஸ்தான் பிரதமர் செயலால் சர்வதேச அளவில் எழுந்த சர்ச்சையும் எதிர்ப்பும் !!
X

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு (67) கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதன் ஒரு பகுதியாக, இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் கொரோனா பாதிப்புடன் அவர் மேற்கொண்ட நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், அந்த நோயுடனேயே தனது அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் ஃபைசல் ஜாவித் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்ரான் நேரடியாகப் பங்கேற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தில், அறை ஒன்றில் 7 பேர் அமர்ந்து உள்ளனர். இம்ரான் கான் உள்பட அனைவரும் முக கவசங்களை அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமர்ந்துள்ளனர்.

இதையடுத்து, கொரோனா விதிமுறைகளை பிரதமா் இம்ரான் கான் மீறியதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரத்தில் சமூக வலைதளப் பயன்பாட்டாளா்களும் இம்ரானுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

newstm.in

Tags:
Next Story
Share it