சர்வதேச புகழ்பெற்ற ஹாலிவுட் பிரபலம் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
சர்வதேச புகழ்பெற்ற ஹாலிவுட் பிரபலம் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். அவருக்கு 91 வயது. முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்தை ரிச்சர்ட் டோனரின் மனைவி லாரன் ஷுலர் அறிவித்தார். ரிச்சர்ட் டோனர் தனது சூப்பர்மேன் படத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை வென்ற இயக்குனர் ஆவார்.
ரிச்சர்ட் டோனர் 1961 இல் எக்ஸ் -15 படத்தின் மூலம் இயக்குநரானார். பின்னர் 1976 ஆம் ஆண்டில் தி ஓமன் திரைப்படம் இயக்கினார். இது உலகின் சிறன் பேய் படங்களில் ஒன்றாக தற்போதும் திகழ்கிறது. இப்படம் தான் அவருக்கான முத்திரையை பதிக்கவும், சர்வதேச அளவில் கவனம் பெறவும் காரணமாக இருந்தது.

1978 ஆம் ஆண்டில் சூப்பர்மேன் திரைப்படத்தை இயக்கியபோது உலகப் புகழ் பெற்றார் ரிச்சர்ட் டோனர். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல் லீதல் வெப்பன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரிச்சர்ட் டோனர் எக்ஸ்- மேன், டெட் பூல் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
ரிச்சர்ட் டோனர் அறிவியல் புனைகதை அகாடமி உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறந்த ஆசிரியர், உந்துசக்தி, சிறந்த நண்பர் மற்றும் சிறந்த இயக்குனரான ரிச்சர்ட் டோனர் இல்லாமல் போய்விட்டார் என்று தன்னால் நம்ப முடியவில்லை என்று இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நினைவு கூர்ந்தார்.

மேலும் அவரது மறைவுக்கு சர்வதேச அளவில் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

