Theme Check

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்கு !!

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்கு !!

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்கு !!
X

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. சுழற்பந்துவீச்சாளரான இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதான சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், யாஷிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார்.

Yasir-Shah

பாலியல் வன்கொடுமை செய்து பர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். மேலும் எனக்கு நடந்த கொடுமையை தடுத்து பிரச்னையை தீர்க்காமல், நடந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்தார். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அவரும் என்னை மிரட்டினார், என்று சிறுமி தனது புகாரில் கூறியுள்ளார்.

Yasir-Shah

இதன் அடிப்படையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில், இதுகுறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். உண்மை குறித்து முழுமையாக தகவல் கிடைத்தபின் கருத்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it